மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி: இருதய ஆபரேஷன் செய்த 11 வயது சிறுவன் 2 பதக்கங்கள் வென்று சாதனை
மாநில அளவில் நடந்த ஜிம்னாஸ்டிக் போட்டியில் இருதய ஆபரேஷன் செய்யப்பட்ட 11 வயது சென்னை சிறுவன் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளான்.
2025ம் ஆண்டுக்கான மாநில அளவில் ஜிம்னாஸ்டிக் போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்டிஏடி அக்வேட்டிக் காம்பளக்சில் நடந்தது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பள்ளிச் சிறுவர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். இதில் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் துவாரக் லெவல் 4 புளோர் ஜிம்னாஸ்டிக் பயிற்சிப் பிரிவு மற்றும் வால்ட் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றான். துவாரக்கின் தம்பி 9 வயது கரன்ஹரி லெவல் 3 பிரிவில் மூன்றாம் இடத்தைப் பிடித்து வெங்கலப் பதக்கம் வென்றான்.
கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியிலும் சிறுவன் துவாரக் மற்றும் அவனது சகோதரர் கரன்ஹரி ஆகியோர் தங்கம் வென்று சாதனை படைத்தனர்.
இவர்களில் சிறுவன் துவாரக் இருதய நோயால் பாதிப்படைந்து ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கு ஆபரேஷன் நடந்த அச்சம் சிறிதும் இன்றி, சிறுவன் துவாரக் ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் பதக்கம் வென்றது அனைவரின் பாராட்டையும் பெற்றது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?