பலநாளாய் நாம் ரகசிய
நண்பர்கள்..
அதை பிரகடனப்படுத்த
பொழுது வாய்க்கவில்லை.
ஏனோ உன் முகம் பார்க்கையில்.
குறுஞ்சிரிப்பு தோன்றிடுமே உடனடியாய்..
பார்த்தும் பார்க்காமலும் எனை கடக்கையில்..
என் பார்வை தொடர்ந்திடுதே உன் பாதங்களை..
நீ வந்தாலே என் தோள் தட்டுகிறான் ..
சொல்லாமலே ஏதோ புரிந்துக்கொண்ட நண்பன்..
வெகு சாதாரணமாய் துடித்திடுமென் இதயம்..
நீ பார்த்துவிட்டால் எகிறிடுதே
இமயமலையை..
சட்டென வந்த சிறு மழைக்கு..
ஓரமாய் மரத்தடியில் நான் ஒதுங்க..
அரியதொரு அதிசயமாய் தனியாய் நீ..
குடையுடன் வந்து தயங்கியே
பார்க்க..
அந்த பார்வை அழைப்பினை புரிந்து..
உன் குடைக்குள் நானும் நுழைய..
நம் காலடிகள் ஸ்வரம் தப்பாமல் பதிய..
மேனியும் கவனமாய் உரசிடாமல் நடக்க..
இந்த மழைக்கு மனதார நன்றியுரைத்தேன்..
கவித்துவமான இந்த நிமிடங்களை பரிசளித்தமைக்கு..
நான் திரும்பவேண்டிய திருப்பமதில் ..
மெல்ல தயங்கி நின்றவளிடம் கிசுகிசுத்தேன்..
உன்னி(இ)டம் வரை வருகிறேனே
என்று..
உன் புன்னகை தந்த தைரியத்தில்..
இப்போது குடையின் அழகான கைப்பிடி..
கோர்த்த நம் இருவரின் விரல்களுக்குள்..
தஞ்சை பியூட்டிஷியன்
உமாதேவி சேகர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?