மறதி.

மறதி.

மறதி

வயோதிக வயதில்

வருவாரும் போவாரும்

எவர் என்றே தெரியவில்லை.


நினைத்து நினைத்துப் பார்த்தாலும்,

நினைவுத் தடம் நெகிழ்ந்து கொடுப்பதில்லை.


அவர் பேச, நான் கேட்கிறேன்.

நான் என்ன பேசுவது?

வந்தவர் குழம்பிப் போய் நகர;


மகன் சைகையால் ஏதோ சொல்ல முனைகிறான்;

என்னிடமா? அவரிடமா?


பதிவாக எதுவும் புரியாமல்

அலமந்து விழிக்கின்றேன்.


'சட்' 

என்று நினைவின் கீற்று ஒன்று!

'கிட்டா!

இன்று டிசம்பர் ஒன்றாம் தேதி!

'உனக்கு பிறந்த நாள் இல்லையா?'

என்பவரைப் பார்த்து

சிரித்த,வைத்தா சொன்னான்:

' ஆமா அதற்கென்ன?'


கிட்டாவிடம் ஃபோன் செய்து, இதை சொல்ல வேண்டும்!'

என்று நினைத்துக் கொண்டான்; வைத்தா!



சசிகலா விஸ்வநாதன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%