மத்திய அரசு நிதியை தராததால் மாநில கருவூலத்தில் பெரும் சுமை - மம்தா பானர்ஜி

மத்திய அரசு நிதியை தராததால் மாநில கருவூலத்தில் பெரும் சுமை - மம்தா பானர்ஜி

பர்தமான்,


மேற்கு வங்காள மாநிலம் பர்தமான் நகரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-


பிரதமர் மோடி மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்களையும் திருடர்கள் என்று அவமதிப்பார் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. நான் பிரதமர் பதவியை மதிக்கும் அதே அளவுக்கு பிரதமர் என் பதவியையும் மதிக்க வேண்டும். மத்திய அரசு நிதியை தராததால்தான் மாநில கருவூலத்தில் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் உச்சத்தில் இருக்கும் உத்தரபிரதேசம், மராட்டியம், பீகார் ஆகிய மாநிலங்களின் இரட்டை என்ஜின் பா.ஜனதா அரசுகளின் செயல்பாடுகளை பிரதமர் மோடி கண்டுகொள்ளவில்லை.


ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது பிரதமர் மோடி மேற்கு வங்காளத்துக்கு பயணம் செய்கிறார். மத்திய நிதியை பயன்படுத்துவது குறித்த மத்திய அரசின் அனைத்து கேள்விகளுக்கும் மாநில நிர்வாகம் திருப்திகரமாக பதிலளித்தது. ஆனால் நிதி வழங்குவதை நிறுத்திவிட்டு மேற்கு வங்காளத்தை ‘திருடர்கள்' என்று அழைக்கிறீர்கள்.


இவ்வாறு அவர் பேசினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%