
மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல் துறை பாதுகாப்பு அனுமதி வழங்கியுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆக. 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு, 25ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி காரணமாக தேதியை ஒத்திவைத்தனர்.
இதனிடையே, மாற்று தேதியில் மாநாடு நடத்துவதற்கு அது தொடர்பான மனுவை காவல் துறையினரிடம் கடந்த 5ஆம் தேதி பொதுச்செயலாளர் என். ஆனந்த் வழங்கினார்.
பின்னர் காவல் துறை தரப்பில் இருந்து மாநாடு நடக்க உள்ள இடம், பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கை, தொண்டர்களுக்கான வாகன நிறுத்துமிடம், உணவு, குடிநீர் வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட 42 கேள்விகள் கேட்கப்பட்டன.
இதற்கு தவெக தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மதுரையில் நடைபெற உள்ள தவெக 2-வது மாநில மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி வழங்கி உள்ளதாக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?