மதுரையில் போஸ்டர் ஒட்டினால் ரூ.1000 அபராதம்

மதுரையில் போஸ்டர் ஒட்டினால் ரூ.1000 அபராதம்


மதுரை, ஆக.30-

பிரதான சாலைகள், சென்டர் மீடியன்கள், குடியிருப்பு தெருக்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் ரூ.1,000 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிப்பதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸார் மூலம் நடவடிக்கை எடுக்கப்போவதாக மதுரை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

 மதுரை மாநகரில் சுவரொட்டிகள் ஒட்டுவது பெருகி விட்டன. அரசியல் கட்சிகள், சுப நிகழ்வுகள், துக்க நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் என எதற்கெடுத்தாலும்சுவவெராட்டிகளை ஒட்டி நகரின் அழகை பாழ்படுத்துவதுடன், குப்பைகள் அதிகரிப்பதற்கும் முக்கிய காரணமாகிவிட்டன. இந்த போஸ்டர்களை மாநகராட்சி ஊழியர்கள் கிழிப்பதும், மீண்டும் மீண்டும் பொதுமக்கள் ஒட்டுவதுமாக உள்ளனர்.இதற்கு முடிவு கட்டும் வகையில், மதுரை மாநகராட்சியில் நேற்று ஒரு அதிரடி தீர்மானத்தை ஆணையர் சித்ரா கொண்டு வந்துள்ளார். 

அந்த தீர்மானத்தில், 'மாநகராட்சி 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளில் பிரதான சாலைகள், சென்டர் மீடியன்கள், குடியிருப்பு தெருக்கள், மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் சிறிய, பெரிய அளவில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதால் மதுரை நகரின் அழகு கெடுவதோடு குப்பை அதிமாகி மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இதனால் பொது சுகாதாரத்துக்கும் பிரச்சினைகள் உண்டாகிறது. எனவே, போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்பவர்கள், முதல் தடவை தெரியாமல் ஒட்டினால் எச்சரிக்கை செய்து ரூ.1,000 அபராதம் விதிக்கவும், 2-வது தடவையாக ஒட்டினால் ரூ.5 ஆயிரமும், 3-வது முறையாக ஒட்டினால் போலீஸார் மூலமும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை முறைப்படுத்திட பொது சுகாதார அவசியம் கருதி தகவல்களை அறிவிக்க பொது தகவல் பலகையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நிர்வாக நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி வேண்டப்படுகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

போஸ்டர் ஒட்டுவதை ஒழுங்குப்படுத்த மாநகராட்சி ஆணையர் சித்ரா எடுத்துள்ள இந்த நடவடிக்கையை, கவுன்சிலர்கள் வரவேற்று தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%