மணமேல்குடி அடுத்த வடக்கம்மாபட்டினத்தில் திரௌபதைஅம்மன் கோவிலில் பூமிதி திருவிழா

மணமேல்குடி செப்8
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த வடக்கம்மாபட்டினத்தில் அருள்பாலித்து வரும்ஶ்ரீதிரௌபதையம்மன் கோவிலில் பூமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
ஆவணி13 ம்தேதி காப்பு கட்டி பத்து நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் சனிக்கிழமை ஶ்ரீதிரௌபதை,ஶ்ரீஅர்சுணன் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இன்று பூமிதி திருவிழாவும்,பால்குடம் எடுத்த நிகழ்ச்சியும் விமர்சையாக நடைபெற்றது.மதியம் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.சுற்றுவட்டார கிராமமக்கள் ஏராளமானோர் வந்து அம்மனை வழிபட்டு அருள் பெற்று சென்றனர்.
இரவு 10 மணிக்கு வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து பிள்ளைமார்கள்,ஊர் நிர்வாகிகள் மற்றும் கிராமத்தார் கள் செய்திருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?