போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ. 7 கோடி மோசடி: 2 பெண்கள் கைது

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ. 7 கோடி மோசடி: 2 பெண்கள் கைது


சென்னை, நவ. 8–


போலி ஆவணங்கள் தயார் செய்து வங்கியில் ரூ.7 கோடி வரை கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.


சென்னை, எழும்பூர் எஸ்பிஐ ஆர்ஏசிபிசி வங்கியின் கிளை மேலாளர் சேதுமாதவன், வினிதா ராஜ்புட் ஆகியோர் சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் கொடுத்த புகார் மனுவில், தங்களது வங்கியில் போலி ஆவணங்கள் சமர்பித்து காம்போ வீட்டு கடனாக ரூ. 7 கோடி வரை கடன் பெற்று வங்கிக்கு திரும்ப செலுத்தாமல் வங்கிக்கு ரூ.7,10,00,725/- இழப்பீடு ஏற்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கொடுத்த புகாரின்பேரில், மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் கொண்ட காவல் குழுவினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.


கமிஷனர் அருண் இந்த புகார் மீது முறையான விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில், மத்திய குற்றப்பிரிவு, கூடுதல் காவல் ஆணையாளர் ஏ.ராதிகா வழிகாட்டுதலின் படி, வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை நடத்தி பெரம்பூர் சரஸ்வதி (46), ஜெமிலா பேகம் (49) ஆகிய இருவரை கைது செய்தனர்.


விசாரணைக்குப் பின் அவர்கள் இருவரும் எழும்பூர், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%