பொதுமக்கள் வாங்கும் பொருட்களில் குறைகள் இருந்தால் 1915-ல் புகார் அளிக்கலாம்: கலெக்டர் தங்கவேல்

பொதுமக்கள் வாங்கும் பொருட்களில் குறைகள் இருந்தால் 1915-ல் புகார் அளிக்கலாம்: கலெக்டர் தங்கவேல்



கரூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலை அரங்கத்தில் கலெக்டர் தங்கவேல் தலைமையில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா நடைபெற்றது.


பின்னர் அவர் தெரிவித்ததாவது:–


தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் பொதுமக்களுக்கு சரியான விகிதத்தில் தரமான பொருட்களை வழங்குவதே ஆகும். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் டிசம்பர் 24 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 1986-ம் ஆண்டு இதே நாளில் தான் இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் அப்போதைய குடியரசுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்டு தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி பொதுமக்களுக்கு 6 முக்கிய உரிமைகள் உள்ளன. உயிருக்கும் உடமைக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு எதிரான பாதுகாப்பு, பொருளின் தரம், அளவு, தூய்மை மற்றும் விலை பற்றி தெரிந்து கொள்ளும் உரிமை, பலதரப்பட்ட பொருட்களில் இருந்து நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கும் வசதி, நுகர்வோர் நலன் சார்ந்த முடிவுகளில் நுகர்வோரின் கருத்துகளுக்கு மதிப்பளித்தல், நியாயமற்ற வணிக முறைகளால் பாதிக்கப்பட்டால் அதற்கு தீர்வு அல்லது இழப்பீடு கோரும் உரிமை மற்றும் தனது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வைப் பெறும் உரிமை போன்ற 6 உரிமைகள் முக்கிய பங்கு வகிக்கின்றது.


தற்போதைய மின்னணு காலத்திற்கு ஏற்ப நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 அமலுக்கு வந்துள்ளது. ​இந்த சட்டத்தின் மூலம் ஆன்லைனில் வாங்கும் பொருட்கள் மூலம் நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தீர்வு காண்பதற்கு இச்சட்டம் பொருந்தும். நுகர்வோர் தாம் வசிக்கும் இடத்திலிருந்தே புகார் அளிக்க முடியும். மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கவும், தவறான விளம்பரங்களைத் தடுக்கவும் இந்த அமைப்பை உருவாக்கி உள்ளது.


பொதுமக்கள் ஏதேனும் பொருளை வாங்கி ஏமாற்றப்பட்டாலோ அல்லது குறைகள் இருந்தாலோ, தேசிய நுகர்வோர் உதவி எண்ணான 1915- அழைத்து புகார் அளிக்கலாமென கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து, 2024-–25ம் ஆண்டிற்கு சிறந்த நுகர்வோர் விழிப்புணர்வு சேவை புரிந்தவர்களை பாராட்டி பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் தங்கவேல் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் நடேசன், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் தட்சணாமூர்த்தி, மாநிலத் தலைவர் பயிற்சியாளர் சொக்கலிங்கம், மாவட்ட நுகர்வோர் குறைதீர் உறுப்பினர் ராஜேந்திரன், அகில இந்திய நுகர்வோர் பாதுகாப்பு இயக்க தலைவர் கோபாலன் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%