சென்னை, நவ. 11-
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வோரின் கவனத்திற்கு ; ரயிலில் பயணம் செய்ய நேற்று முதல் முன்பதிவு துவங்கியது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையானது 2026-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் ரயிலில் பயணம் செய்வதற்கு 10ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜனவரி 9-ம் தேதி வெள்ளிக்கிழமை ரயிலில் பயணம் செய்ய விரும்புவர்களுக்கான முன்பதிவு நேற்று துவங்கியது. ஜனவரி 10ல் பயணம் செய்ய விரும்புவர்கள் இன்று 11-ம் தேதி முன்பதிவு செய்யலாம். ஜனவரி 11-ம் தேதி பயணிக்க விரும்புவர்கள் நாளை 12- ம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஜனவரி 12-ல் செல்ல விரும்புபவர்கள், நவ. 13-ம் தேதியும், 13ம் தேதிக்கு நவ. 14-ம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி 14-ம் தேதி பயணத்துக்கு நவ.15ம் தேதியும், ஜனவரி 15-ம் தேதிக்கு நவ,16-ம், ஜனவரி 16-ம் தேதிக்கு நவ.17 ம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம். நாள்தோறும் காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்கும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது-
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?