பெண் பலி எதிரொலி: மழை நீர் வடிகால் தொட்டிகள் ஆய்வு - மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவு
Sep 05 2025
17

சென்னை,
சென்னை சூளைமேட்டில் மழைநீர் வடிகால்வாயில் தீபா என்ற பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தவறி விழுந்து இறந்தாரா? கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் மாநக ராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பருவ மழைக்காலம் தொடங்க இருப்பதால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் கால்வாய் பணிகள் துரி தமாக நடைபெற்று வரு கின்றன.
மழைநீர் கால் வாய்க்குள் சாலைகளில் இருந்து செல் லும் மழைநீர் அடைப்பு ஏற்படாமல் போவதற்கு 2 அடி அல்லது வசதியாக வண் டல் மண் தொட்டிகள் அமைக்கப் பட்டுள்ளன. 2 ஒன்றரை அடி அகலம் மற்றும் ஆழத்தில் தான் இந்த தொட்டிகள் அமைக் கப்பட்டு வருகிறது. இதன் வழியாகத்தான் மழை நீர் கால்வாய்க்குள் தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சென்னையில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் மழைநீர் வண்டல் மண் தொட்டிகள் உள்ளது. புதி தாக 4 ஆயிரம் தொட்டிகள் கட்டுவதற்கு திட்டமிட்டு அந்த பணிகள் னிகள் பல்வேறு இடங்களில் நடக்கிறது.
இதுவரை 3 ஆயிரம் தொட் டிகள் கட்டப்பட்டு உள்ளன. 1000 தொட்டிகள் கட்டும் பணி நடைபெற்று. வருகிறது. பெண் பலியான சம்ப வத்தை தொடர்ந்து 4 ஆயிரம் மழைநீர் தொட்டி களை ஆய்வு செய்ய மாநக ராட்சி அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர். அதனை தொடர்ந்து இன்று காலை யில் இருந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
2 அடிக்குள்ளாகத்தான் இந்த மழை நீர் தொட்டி அமைக்கப்படுகிறது. அவை எல்லாம் இரும்பு கம்பிகள் வைத்து மூடப்படுகிறது. அதற்குள் விழுந்து உயிர்பலி ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனாலும் எல்லா மழைநீர் தொட்டிகளையும் ஆய்வு செய்கிறோம். நாள் ஒன்றுக்கு 10 தொட்டிகள் செய்து முடிக்கப்படும். மூடப்படாமல் தொட்டிகள் உள்ளதா என வார்டு வாரியாக சரிபார்த்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?