புதிய பொருளாதார தடை: ரஷியா மீது டிரம்ப் போர் தொடுக்கிறார் - ரஷிய முன்னாள் அதிபர் சாடல்

புதிய பொருளாதார தடை: ரஷியா மீது டிரம்ப் போர் தொடுக்கிறார் - ரஷிய முன்னாள் அதிபர் சாடல்



புதாபெஸ்டில் ரஷிய அதிபர் புதினை சந்திக்கும் நிகழ்ச்சியையும் டிரம்ப் ரத்து செய்துவிட்டார்.

மாஸ்கோ,


உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வராததால் ரஷியா மீது கடுமையான கோபத்தில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அந்த நாட்டுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை அறிவித்து உள்ளார். மேலும் புதாபெஸ்டில் ரஷிய அதிபர் புதினை சந்திக்கும் நிகழ்ச்சியையும் ரத்து செய்துவிட்டார்.


டிரம்பின் இந்த நடவடிக்கைகளை ரஷிய முன்னாள் அதிபரும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணைத்தலைவருமான டிமித்ரி மெத்வதேவ் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘டிரம்ப் பெண்டுலம் தற்போது தெளிவான தலைகீழ் மாற்றத்தைக் கொண்டுள்ளது. தேவையற்ற பேச்சுவார்த்தைகளைப் பொருட்படுத்தாமல் உக்ரைனை இப்போது தாக்க முடியும். மேலும் அது உண்மையிலேயே சாத்தியமான வெற்றியை அடைய முடியும். அது களத்தில், மேசைக்குப் பின்னால் அல்ல’ என தெரிவித்தார்.


மேலும் அவர், ‘புதிய பொருளாதார தடைகளும், புதாபெஸ்ட் நிகழ்வை ரத்து செய்திருப்பதும் பிரதான அம்சத்தை மாற்றாது. மாறாக இது ரஷியாவுக்கு எதிரான போர் நடவடிக்கை ஆகும். தற்போது டிரம்பும் பைத்தியக்கார ஐரோப்பாவுடன் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டுள்ளார்’ என்றும் சாடினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%