புதிய தமிழகம் உட்பட 10 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
Oct 03 2025
61
சென்னை: தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை சமர்ப்பிக்காததால் புதிய தமிழகம் உட்பட பத்து அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை ஆண்டு தோறும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அனைத்து இந்திய எம்ஜிஆர், மக்கள் முன்னேற்ற கழகம், கிறிஸ்துவ ஜனநாயக முன்னணி, ஜெபமணி ஜனதா, காம ராஜர் தேசிய காங்கிரஸ், மக்கள் சக்தி கட்சி, என் இந்தியா கட்சி, புதிய தமிழகம், இந்திய குடியரசு கட்சி - சிவ்ராஜ், தமிழக முன்னேற்ற காங்கிரஸ், வளமான தமிழக கட்சி ஆகிய பத்து அரசியல் கட்சிகள் 2021 முதல் கணக்குகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்கவில்லை. இதனால் இந்த கட்சிகளை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளது. அதற்கு முன்னதாக கருத்து தெரிவிக்க வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. இக்கட்சிகள் குறிப்பிட்ட தேதிக்குள் எழுத்துப்பூர்வ மான அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் முன் ஆஜராக வேண்டும். பதில் வரா விட்டால் அக்கட்சிகளிடம் கருத்து இல்லை என கருதி, பதிவு பட்டி யலில் இருந்து நீக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டா ரங்கள் தெரிவித்தன.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?