பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் ஏழைகளின் பெயர்கள் நீக்கம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் ஏழைகளின் பெயர்கள் நீக்கம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பாட்னா,


பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வாக்குகள் திருட முயற்சி நடப்பதாக நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில், பீகாரில் ராகுல்காந்தி யாத்திரை நடத்தி வருகிறார். இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக சீதாமர்ஹியில் நடந்த பேரணியில் ராகுல்காந்தி உரையாற்றியதாவது;


"பீகாரின் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏழைகள் மற்றும் சமூக ரீதியாக பலவீனமான பிரிவைச் சேர்ந்த 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் தங்கள் வாக்குரிமையை கொள்ளையடிக்க பீகார் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். வாக்கு திருட்டில் பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டது. அதனை நாங்கள் அம்பலப்படுத்தியுள்ளோம். அவர்கள் அதை மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகாவில் செய்தார்கள். இப்போது அவர்கள் பீகாரில் அதை மீண்டும் செய்ய விரும்புகிறார்கள். அதை நாங்கள் செய்ய அனுமதிக்க மாட்டோம். வாக்குத்திருட்டு என அழைத்ததற்கு வரும் மாதங்களில் கூடுதல் ஆதாரங்களை வழங்குவோம்.”


இவ்வாறு அவர் பேசினார். பீகாரில் நடப்பாண்டின் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%