பாஜக அதிருப்தி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் ஆதரவு

பாஜக அதிருப்தி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் ஆதரவு


கோபால்கன்ச்: பிஹார் கோபால்கன்ச் தொகுதியில் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சசி சேகர் சின்ஹா திடீரென தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். பாஜக அழுத்தம் காரணமாக அவர் தனது மனுவை வாபஸ் பெற்றார் என பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டினார்.


இந்நிலையில் கோபால்கன்ச் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் பாஜக அதிருப்தி வேட்பாளர் அனுப் குமார் வஸ்தாவுக்கு ஜன் சுராஜ் கட்சி ஆதரவு அளிக்கும் என பிரசாந்த் கிஷோர் நேற்று அறிவித்தார். இது குறித்து பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:


கோபால்கன்ச் தொகுதியில் பிரபல சமூக சேவகராக விளங்கும் வஸ்தா பாஜக மாவட்ட தலைவராக பணியாற்றினார். ஆனால் அவருக்கு சீட் வழங்காமல், வசதியான ஒருவருக்கு பாஜக சீட் வழங்கியது. அவர் சுயேட்சை வேட்பாளராக இருந்தாலும், அவருக்கு எங்கள் முழு ஆதரவு உள்ளது. பாஜக.,வுக்கு நாங்கள் பாடம் கற்பிக்க விரும்புகிறோம். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%