பாகிஸ்​தானின் எப் 16 போர் விமானங்​களை மேம்​படுத்த அமெரிக்க அரசு ஒப்​புதல்

பாகிஸ்​தானின் எப் 16 போர் விமானங்​களை மேம்​படுத்த அமெரிக்க அரசு ஒப்​புதல்


 

இஸ்​லா​மா​பாத்: பாகிஸ்​தான் விமானப் படை​யின் எப்16 ரக போர் விமானங்​களை மேம்​படுத்த அமெரிக்க அரசு ஒப்​புதல் வழங்கி உள்​ளது. பாகிஸ்​தான் விமானப் படை​யில் எப்16 ரகத்தை சேர்ந்த 76 போர் விமானங்​கள் உள்​ளன.


இவை அமெரிக்க தயாரிப்பு போர் விமானங்​கள் ஆகும். கடந்த 1990-ம் ஆண்டு முதல் எப்16 போர் விமானங்​களுக்கு தேவை​யான உதிரி பாகங்​கள், தொழில்​நுட்​பங்​களை பாகிஸ்​தானுக்கு வழங்க அமெரிக்கா மறுத்து வந்​தது. இதன் ​காரண​மாக பாகிஸ்​தானின் பெரும்​பாலான எப்16 போர் விமானங்​கள் தரை​யிறக்​கப்​பட்டு உள்ளன.


தற்​போது அந்த நாட்​டின் விமானப் படை​யில் சீன தயாரிப்​பான ஜேஎப்​-17எஸ் போர் விமானங்​களே அதிக அளவில் பயன்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இந்த சூழலில் பாகிஸ்​தானின் எப்16 போர் விமானங்​களை மேம்​படுத்த அமெரிக்க அரசு அண்​மை​யில் ஒப்புதல் வழங்கி உள்​ளது. இதன்​படி பாகிஸ்​தான் போர் விமானங்களுக்கு தேவை​யான உதிரி பாகங்​கள், தொழில்​நுட்பங்கள் வழங்​கப்பட உள்​ளன.


குறிப்​பாக எதிரி​களின் ரேடார்​களில் இருந்து தப்​பிக்க உதவும் சிறப்பு கருவி​கள் பாகிஸ்தானின் எப்16 போர் விமானங்​களில் பொருத்​தப்பட உள்​ளன. இது தொடர்​பான வரைவு அறிக்கை கடந்த 8-ம் தேதி அமெரிக்க நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்யப்பட்​டது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%