பாகிஸ்தான் ராணுவத்தில் புதிய படைப்பிரிவு - ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு

பாகிஸ்தான் ராணுவத்தில் புதிய படைப்பிரிவு - ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு

நாட்டின் ராணுவ எதிர்வினை திறனின் முன்னேற்றத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்,


பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா அதிரடி தாக்குதலை நடத்தியது. இதில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.


இந்தியாவின் பதிலடியை சமாளிக்க முடியாத பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சியது. இதையடுத்து தாக்குதல் நிறுத்தப்பட்டது. இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தான் நாட்டின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. முக்கிய ராணுவ விமானத்தளங்கள் பலத்த சேதம் அடைந்தன.


இதையெல்லாம் மறுத்த பாகிஸ்தான், தாக்குதலில் தாங்கள் வெற்றி அடைந்துவிட்டதாக வாய்சவடால் செய்தது. மேலும் பாகிஸ்தான் விமானங்கள் எதுவும் தாக்கப்படவில்லை என்றும் கூறியது.


இந்தநிலையில் பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி, அந்த நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்ட அறிக்கையில், “பாகிஸ்தான் ராணுவத்தை மேம்படுத்தும் நோக்கில், ராணுவ ராக்கெட் படை என்ற புதிய பிரிவு தொடங்கப்பட உள்ளது. போர்க்காலங்களில் ஏவுகணை, ராக்கெட் ஆகியவற்றின் ஆற்றலை ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும் இந்த படைப்பிரிவு செயல்படும். நாட்டின் ராணுவ எதிர்வினை திறனின் முன்னேற்றத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்” என்று தெரிவித்திருந்தார்.


இந்த சூழலில் இந்த படைப்பிரிவு எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து எதுவும் அந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%