பாகிஸ்தான் துணை ராணுவப் படை தலைமையகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 6 ராணுவ வீரர்கள் பலி

பெஷாவர்,
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள துணை ராணுவப்படையின் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
பன்னு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை சுவரில் மோதி கூட்டாட்சி கான்ஸ்டாபுலரி (FC) தலைமையகத்தின் பாதுகாப்பை மீற முயன்றபோது இந்தத் தாக்குதல் நடந்ததாக ராணுவ ஊடகப் பிரிவு ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த தற்கொலை குண்டுவெடிப்பினால் ராணுவப்படையின் தலைமையகத்தின் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேலும் அருகிலுள்ள பொதுமக்கள் உள்கட்டமைப்பை சேதப்படுத்தியது. இதில் மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர். இருப்பினும், பாதுகாப்புப் படையினரின் "விழிப்புடன் மற்றும் உறுதியான" பதிலடியால், தாக்குதல் நடத்தியவர்களின் முயற்சிகள் விரைவாக முறியடிக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?