
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பஹ்துன்ஹ்வா மாகாணத்தில் உள்ளது கவுசர் கிரிக்கெட் மைதானம். இந்த மைதானத்தில் சனிக்கிழமை அன்று உள்ளூர் மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார். அவர் வீரரா? பார்வையாளரா? எனது தெரியவில்லை. பலர் படுகாயத்துடன் பஜௌர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும்,”இது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாகத் தெரிகிறது” என பஜௌர் மாவட்ட காவல்துறை அதிகாரி வகாஸ் ரபீக் தெரிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?