பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் 2 பவுன் நகை மோசடி - கோவில் பூசாரி கைது

பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் 2 பவுன் நகை மோசடி - கோவில் பூசாரி கைது

சென்னை

அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் ஷகீலா. இவர், அம்பத்தூர் எம்.கே.பி நகரில் உள்ள நாகாத்தம்மன் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த கோவில் பூசாரி லோகேஷ், ஷகீலாவிடம், “உங்கள் வீட்டில் கலசம் வைத்து பரிகார பூஜை செய்தால் கஷ்டங்கள் தீரும்” என்று கூறியுள்ளார்.


அதன்படி ஷகீலா பரிகாரம் செய்வதற்காக லோகேஷை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு லோகேஷ், ஒரு கலசத்தில் ஷகீலாவின் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை கழட்டி வாங்கி உள்ளே வைத்து பரிகார பூஜை செய்வதுபோல் நடித்துள்ளார். பின்னர் நான் சொல்லும் வரை அதை எடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றார்.


இந்த நிலையில் சுமார் ஒரு மாதம் ஆகியும் லோகேஷ் எதுவும் சொல்லாததால் சந்தேகம் அடைந்த ஷகீலா, கலசத்தை எடுத்து பார்த்துள்ளார். அப்போது அதில் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர்தான் பூசாரி லோகேஷ் அந்த நகையை நூதன முறையில் மோசடி செய்தது தெரிந்தது.


இதுகுறித்து ஷகீலா அம்பத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேசை கைது செய்தனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%