பண்ருட்டியில் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் தற்கொலை!

பண்ருட்டியில் ஒரே குடும்பத்தில்  மூன்று பேர் தற்கொலை!

கடலூர், ஆக.19-

கடலூர் மாவட்டம், பண்ருட்டி இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் ராஜா (40) விவசாயி. இவர், மனைவி மற்றும் மகன், மகளுடன் வசித்து வந்தார். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக ராஜாவின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மகன் மற்றும் மகளுடன் ராஜா வசித்து வந்த நிலையில்,மனமுடைந்த ராஜா செவ்வாய்க்கிழமை (ஆக.19) தனது மகன் குமரகுரு (12), மற்றும் மகள் தன்யாஶ்ரீ (7) ஆகியோர் ஒரே கயிற்றில் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். நண்பர்களுக்கு தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி விட்டு அவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் நண்பர்கள் போலீசார் துணையுடன் வீட்டிற்கு சென்று மூவரின் உடலையும் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து ராஜாவின் மனைவியிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%