பணிவிடை

பணிவிடை


      கொஞ்ச நாட்களாகவே ராதாவின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருப்பதாகத் தென்பட்டது மாணிக்கத்துக்கு. வயது முதிர்வின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கும் அவனுடைய அம்மாவை கவனித்துக் கொள்வதெல்லாம் ராதா தான். அவள் நன்றாக கவனித்துப் பார்ப்பதால் தான்

அவன் தைரியமாக வெளியில் வேலைக்கு செல்லவே ஆரம்பித்தான்.

ஆரம்பத்தில் கம்பெனி வேலையை உதறிவிட்டு அம்மாவை கவனித்துக் கொள்ளலாமா என்ற யோசனையில் இருந்தவனை

'நான் இருக்கிறேன் நீங்க பயப்படாதீங்க ' என்று தைரியத்தைக் கொடுத்தவள் ராதா தான். 


    அந்த ராதாவா இப்போதெல்லாம்

இந்த மாதிரி நடந்து கொள்கிறாள்

என்பதை நினைக்கும் போது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்று காலை. அம்மாவை குளிக்க வைப்பதற்காக அழைத்துச் செல்வாள் என்று காத்திருந்த மாணிக்கத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. "ஏன் நான் ஒருத்தி தான் இந்த வீட்டில் இருக்கேனா நீங்க எல்லாம் இந்த வேலையை செய்ய மாட்டீங்களா ?"

என்ற பதிலே அவளிடம் இருந்து வந்தது .ஷாக் ஆனான் மாணிக்கம் 


     கம்பெனியில் அன்று பூராவும் இதே நினைப்பாக இருந்தது அவனுக்கு .தங்கை விஜியிடம் கேட்டால் இதற்கு பதில் கிடைக்குமா என்று யோசனை செய்தான். விஜியும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டிலேயே தான் இருந்தாள்.வரன் எதுவும் தகையாததால் திருமணம் தள்ளிக் கொண்டே போனது.


       கம்பெனியில் இருந்து வீட்டுக்கு வந்த மாணிக்கம் வீட்டில் விஜியை

காணாமல் ஒருவேளை அவள் அவளுடைய தோழியை பார்க்க போயிப்பாளோ என்று 

 நினைத்தவாறே குழம்பிக் கொண்டிருந்தான்.


     அதே நேரம் வீட்டின் பூஜை அறையில் சாமி படத்துக்கு முன் நின்று ராதா மனம் உருக வேண்டிக் கொண்டிருந்தாள் :

"என்னை மன்னிச்சிடு தாயே !

நான் என் மாமியாரை என்னோட சொந்த அம்மாவாகத் தான் பார்க்கிறேன். அவருக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாரா இருக்கேன். படிப்பு முடிந்து வீட்டிலேயே இருக்கும் விஜி நான் மாமியாருக்கு செய்யும் பணிவிடைகளை கண்டும் காணாமலும் இருக்கிறாள்.சொந்த அம்மாவையே கவனிக்காதவள் 

நாளை திருமணம் ஆகி செல்லும் இடத்தில் தன்னுடைய மாமனார் மாமியாரை எப்படி கவனிப்பாள்? 

இப்போ இருந்தே அவள் இதையெல்லாம் பழகிக் கொள்ளட்டும்னுதான் நான் அவரிடம் அப்படிப் பேசிட்டேன்.

என்னோட நல்ல நோக்கத்தை நீ தான் நிறைவேற்றி வைக்கணும்" 



மு.மதிவாணன்

குபேந்திரன் நகர்

அரூர் 636903

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%