ரூபாய் நோட்டு இன்மையால்
கரகரவென அழ வைக்கிறது
வதங்கி சோர்ந்து விடுகிறது
அதிர்ஷ்டத்தைத் தேடி ஓடுகிறது
ஜோதிடத்தில் ஈர்ப்பு ஏற்படுகிறது
சூதாட்டத்தில் மனம் இலயிக்கிறது
உழைப்பை மட்டும் விலக்குகிறது
அதுவே கூடுதலாய் இருப்பின்
கர்வத்தால் நாட்டியம் புரிகிறது
திருப்பணி நன்கொடை தருகிறது
கல்யாணத்திலும் பிறந்த நாளிலும்
பகட்டாய் விழாக்கள் அமைக்கிறது
இறக்குமதி காரில் வரட்டு கௌரவம்
காலச் சக்கரம் சுழல்வதை அறியாதோர்

-பி. பழனி,
சென்னை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%