நீலகிரி மாவட்ட பழங்குடியின மாணவர்கள் பயன்பாட்டிற்காக பள்ளி வாகனங்கள் இயக்கம்
Oct 15 2025
35
நீலகிரி, அக். 13–
நீலகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக ரூ.41.33 லட்சம் மதிப்பில் 3 பள்ளி வாகனங்கள் மற்றும் ரூ.85 லட்சம் மதிப்பில் பழங்குடியினர்களுக்கான 5 நடமாடும் மருத்துவ வாகனங்கள் என 8 வாகனங்களுக்கான சாவிகளை ஓட்டுநர்களிடம் வழங்கி, கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:–
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 6ந் தேதி திருச்சி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு 26 வாகனங்களை பழங்குடியின உண்டு உறைவிடப்பள்ளிகளின் பயன்பாட்டிற்காகவும், கோவை, தர்மபுரி, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பழங்குடியின மக்களின் மருத்துவ பயன்பாட்டிற்காக 20 புதிய நடமாடும் மருத்துவ வாகனங்களையும் வழங்கினார்கள்.
இதில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள ஜி.டி.ஆர் கார்குடி, ஜி.டி.ஆர் பொக்காபுரம், ஜி.டி.ஆர் குஞ்சப்பணை ஆகிய 3 பள்ளிகளுக்கு பள்ளி வாகனங்களும், பழங்குடியின மக்களின் மருத்துவ பயன்பாட்டிற்காக 5 நடமாடும் மருத்துவ வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது. பள்ளி வாகனங்கள் மற்றும் நடமாடும் மருத்துவ வாகனங்கள் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாா்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?