நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்டங்களையும் அகற்ற வேண்டும்

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஆக. 20 -
காவல் நிலையம் மட்டுமல்லாமல் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டு உள்ள அனைத்துக் கட்டுமானங்களும் அகற்றப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. செம்மஞ்சேரியில் நீர்நிலைகளை ஆக்கிர மித்துக் காவல் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அறப்போர் இயக்கத் தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2019-ஆம் ஆண்டு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசார ணைக்கு வந்தது. அப்போது குறிப்பிட்ட அந்த நிலம், ‘மேய்க்கால் தாங்கல் சாலை’ என்பதை ‘மேற்கால் சாலை’ என வகை மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப் பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், உயர் நீதிமன்றம் நியமித்த குழுவின் அறிக் கையிலும், காவல் நிலையம் அமைக்க அனுமதியளித்துப் பிறப்பித்த உத்தரவு களிலும் அந்த நிலத்தை நீர்நிலை என்று குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்தனர். “நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசு, தனது சட்டங்களை மீறிச் செயல்பட லாமா?” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “நீர்நிலையை ஆக்கிரமித்து ஏராளமான கட்டடங்கள் உள்ள நிலையில், காவல் நிலை யம் அமைப்பதற்கு மட்டும் எதிர்ப்புத் தெரி வித்து வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரரின் செயல் கண்டனத்துக்குரியது. காவல் நிலை யம் மட்டுமல்லாமல் நீர்நிலைகளை ஆக்கிர மித்துக் கட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்டு மானங்களும் அகற்றப்பட வேண்டும்” எனவும் தெரிவித்தனர். பின்னர் வழக்கு தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து விளக்க மளிக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசார ணையைத் தள்ளிவைத்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?