நண்பரை கொன்று கிணற்றில் வீசிய 4 பேர் கைது

நண்பரை கொன்று கிணற்றில் வீசிய 4 பேர் கைது

கோவை:

கோவை​யில் வசிக்​கும் பால​முரு​கன், முரு​கப்​பெரு​மாள் ஆகியோர் கடந்த சில தினங்​களுக்கு முன் செட்​டிப்​பாளை​யம் காவல்​நிலை​யத்​துக்கு சென்​று, கடந்த 2 மாதங்​களுக்கு முன்பு தாங்​கள் ஒரு​வரை கொன்று கிணற்றில் வீசியதாக கூறி சரண் அடைந்​தனர். இதைத்​தொடர்ந்​து, போலீஸார் கிணற்​றில் இருந்து அழுகிய நிலை​யில் இளைஞர் சடலத்தை மீட்டு இரு​வரை​யும் கைது செய்து விசா​ரணை மேற்​கொண்​டனர்.


இதுகுறித்து போலீ​ஸார் கூறிய​தாவது: திருநெல்​வேலி மாவட்​டத்​தைச் சேர்ந்த நண்பர்கள் நியூட்​டன்​(28), பெனிட்​டோ(27) சென்னை அண்ணா நகரில் தங்​கி பணி​யாற்றி வந்​தனர். பின்னர் அங்கு வந்த மற்றொரு நண்பரான ஜெய​ராமனுக்கு​(24) வேலை வாய்ப்புக்காக நியூட்​டன் ஓர் ஆட்​டோவை ஏற்​பாடு செய்து கொடுத்​துள்​ளார். ஆனால், ஜெய​ராமன் அதை முறை​யாக ஓட்​டா​மல் மது குடித்து சுற்​றித்​திரிந்​துள்​ளார்.


இதனால் ஆத்திரத்தில் நியூட்​டன் தாக்​கிய​தில் ஜெய​ராமன் உயி​ரிழந்​தார். பின்னர் கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்த பாலமுருகன், அவரது நண்பர் முருகப்பெருமாள் ஆகியோர் உதவியுடன் ஜெய​ராமனின் சடலத்​தை, மலுமிச்​சம்​பட்​டி​யிலுள்ள கிணற்றில் கல்லை கட்டி வீசி​யுள்​ளனர்.


பின்னர் பால​முரு​கன் இவ்​விவ​காரத்தை கூறி, நியூட்​டன், பெனிட்​டோ​விடம் பணம் கேட்டு அடிக்​கடி மிரட்​டி​யுள்​ளார். ஓரிரு முறை பணம் கொடுத்த அவர்​கள் பின்​னர் தராததால் பால​முரு​க​னும், முரு​கப்​பெரு​மாளும் செட்​டி​பாளை​யம் போலீஸில் சரணடைந்​தனர். போலீஸ் விசாரணையில் நியூட்​டன், பெனிட்டோ ஆகியோ​ருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிந்ததால் அவர்களையும் கைது செய்​தனர். நால்​வரும் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்​. இவ்​வாறு போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%