நட்பு...

நட்பு...


நான் உயரத்தில் இருக்கும் போது  

என் கூடவே நீ இருந்தாய்.

என் வீழ்ச்சியில் என்னை விட்டு தொலைதூரம் சென்று விட்டாய்.

சிரிப்பைக் கடன் வாங்கி

சுயநலத்தை மட்டும்

சொந்தமாக வைத்திருந்தாய்.

“நட்பு” என்ற சொல்லை

முகமூடியாக அணிந்து,

என் நம்பிக்கையை

சிதறடித்துவிட்டாய்.

என் வலியில் நான் நன்கு கற்றது ஒன்று.

எதிரிகள் காயப்படுத்தினார்கள்

ஆனால்

கூடா நண்பனான நீ தான் என் நெஞ்சில் 

ஆழமாகக் குத்திவிட்டாய்.

உயிரைக் கொடுத்து உதவும் உண்மையான நண்பர்களையே ஒதுக்கும் நிலைக்கு என்னைத் தள்ளிவிட்டாயே.....



உ.மு.ந.ராசன்கலாமணி

கோவை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%