தெலங்கானா சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

தெலங்கானா சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

ஹைதராபாத்:

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்​து, கொன்ற வழக்​கில் குற்​ற​வாளிக்கு நல்​கொண்டா நீதி​மன்​றம் தூக்கு தண்​டனை விதித்​துள்​ளது.


தெலங்கானா மாநிலம், நல்​கொண்​டா​வில் கடந்த 2013-ம் ஆண்​டு, வீட்​டில் தனி​யாக உறங்கி கொண்​டிருந்த 12 வயது சிறுமியை அதே பகு​தியை சேர்ந்த மொஹம்மி முகர்​ணம் என்​கிற 35 வயது நபர், வீட்​டில் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்​ததுடன், அவரை கொலை செய்​து, வீட்​டின் அருகே உள்ள ஒரு கால்​வா​யில் வீசி சென்​று​விட்​டார். அதன் பிறகு உடல் ஒரு ஏரிக்​கரை​யில் ஒதுங்​கியது.


இதனை தொடர்ந்​து, பெற்​றோர் கொடுத்த புகாரின் அடிப்​படை​யில் நல்​கொண்டா போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, குற்​ற​வாளியை கைது செய்து நல்​கொண்டா போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் ஆஜர் படுத்​தினர். இவ்​வழக்கு சுமார் 12 ஆண்​டு​களாக நடந்து வந்த நிலை​யில், நேற்று இவ்​வழக்கை விசா​ரணை செய்த போக்சோ நீதி​மன்ற நீதிபதி ரோஜா ரமணி, குற்​ற​வாளி மொஹம்மி முகர்​ணத்​திற்கு தூக்கு தண்​டனை​யும், ரூ.1.10 லட்​சம் அபராத​மும் வி​தித்​து தீர்ப்​பளித்​தார்​.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%