தெருநாய்களுக்கான கருத்தடை செலவு ரூ.2,400 கோடி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல்

தெருநாய்களுக்கான கருத்தடை செலவு ரூ.2,400 கோடி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல்

புதுடெல்லி:

தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க கூடாது. அவற்றுக்கு கருத்தடை, தடுப்பூசி போட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஆனால், தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.


டெல்லி மற்​றும் அதன் சுற்​றுப்​புறப் பகு​தி​களில் சுமார் 8 லட்​சம் தெரு நாய்​கள் இருக்​கும் என்று பொதுநல அமைப்பு ஒன்று கணக்கிட்​டுள்​ளது. அவை அனைத்​துக்​கும் கருத்​தடை மற்​றும் தடுப்​பூசி போடு​வதற்கு அவ்​வளவு தொகையை ஒதுக்க முடி​யுமா என்ற கேள்வி எழுந்​துள்​ளது.


தெரு நாய்​களுக்கு கருத்​தடை செய்ய சுமார் ரூ.2,400 கோடி செல​வாகும் என்று கணக்​கிடப்​பட்​டுள்​ளது. இத்​துடன், தெரு நாய்​களை பிடிப்​பது, கருத்​தடை செய்​வதற்கு போது​மான கால்​நடை மருத்​து​வர்​கள், ஊழியர்​கள் தேவை​யும் உள்​ளன. கருத்​தடை செய்​வதற்கான தனி மையங்​கள் அமைக்க வேண்​டிய செல​வும் உள்​ளது. ரூ.2,400 கோடி என்​பது கருத்​தடை செய்​வதற்​கான செலவு மட்டும்​தான். தவிர கருத்​தடைக்கு பிறகு நாய்​களை பராமரிக்க வேண்​டிய செல​வும் உள்​ளது.


இதுகுறித்து டெல்​லி​யில் உள்ள சிறு விலங்கு கால்​நடை சங்​கத்​தின் உறுப்​பினர் டாக்​டர் சிவம் படேல் கூறுகை​யில், ‘‘ஆண் நாய்​கள், பெண் நாய்​கள் என தனித் தனி​யாக கருத்​தடை செய்ய வேண்​டும். மேலும் ஆண் நாய், பெண் நாய்​களின் கருத்​தடைக்​கான செல​வு, குணப்​படுத்​துதலில் வேறு​பாடு​கள் உள்​ளன’’ என்​றார்.


ஆண் நாய்​களுக்கு 4 மாதங்​கள் முதல் 1.5 வயது வரையி​லான காலமே கருத்​தடை செய்​வதற்​கு சிறந்​தது. எனினும், 1.5 ஆண்டுகளுக்​குப் பிறகும் கருத்​தடை செய்ய முடி​யும் எனக் கூறுகின்​றனர். மேலும், ஆண் நாய்​களுக்கு ரத்தப் பரிசோதனை, உயிரணுக்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்​று​வது, அறுவை சிகிச்​சைக்​குப் பிந்​தைய பராமரிப்பு என 3 கட்​டங்​களாக இதை அமல்படுத்த வேண்​டும்.


இதற்கு 3 முதல் 5 நாட்​கள் வரை ஆகும். மேலும் ஒரு ஆண் நாய்க்கு ஆண்மை நீக்​கத்​துக்கு குறைந்​த​பட்​சம் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை செல​வாகும். 6 மாதங்​களுக்கு பிறகே பெண் நாய்​களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடி​யும். மேலும் ஆண் நாய்​களை விட கருத்​தடை செல​வும் அதி​க​மாகும். அவற்​றுக்கு குறைந்​தது ரூ.8,000 முதல் ரூ. 9,000 வரை செல​வாகும். இதனால் உச்ச நீதி​மன்ற தீர்ப்பை முழு​மை​யாக அமல்​படுத்​து​வ​தில்​ டெல்​லி அரசுக்​கு சிக்​கல்​ எழுந்​துள்​ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%