திருவண்ணாமலையில் பெண்கள் இழுக்கும் பராசக்தி தேர் புதுப்பிப்பு
Nov 08 2025
10
திருவண்ணாமலை, நவ. 9-
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் 7-ம் நாள் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடக்கும். அன்றைய தினம் விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேரில் எழுந்தருளி தனித்தனியாக மாட வீதியில் வலம் வருவார்கள். இதில் பராசக்தி அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பார்கள்.
சுமார் 45.11 அடி உயரமுள்ள பராசக்தி அம்மன் தேர் புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறை ரூ.71 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து அந்த தேர் புதுக்கப்பட்டு வருகிறது. தேரின் மேல் 5 நிலைகளும் புதுப்பிக்கும் பணியும், தேரின் உச்சியில் அமைந்துள்ள மேல் கூண்டு, வேங்கை மரத்தினாலான 53 தூண்கள் புதிய மரங்களைக்கொண்டு அமைக்கப்பட்டு வண்ண வண்ண நிறங்களால் வர்ணம் பூசம் பணி முடிந்துள்ளது. இதையடுத்து வருகிற 14-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்ளாக புதுப்பொலிவுடன் பராசக்தி அம்மன் தேரின் வெள்ளோட்டம் நடக்கும் என்று கோவில் இணை ஆணையர் பரணிதரன் தெரிவித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?