திருச்செந்தூர் கோயிலில் குறுஞ்செய்தி மூலம் தரிசனத்தில் முறைகேடு: பக்தர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

திருச்செந்தூர் கோயிலில் குறுஞ்செய்தி மூலம் தரிசனத்தில் முறைகேடு: பக்தர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

தூத்துக்குடி: ​

திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் குறுஞ்​செய்தி மூலம் குறிப்​பிட்ட பக்​தர்​களை மட்​டும் தரிசனத்​துக்கு முன்​னுரிமை கொடுத்து அனுப்​பும் முறை​கேடு தொடர்​பாக, பக்​தர் ஒரு​வர் வெளி​யிட்ட வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது.


திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயிலுக்கு தின​மும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் வரு​கின்​றனர். விடு​முறை நாட்​களில் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​களும், திரு​விழா நாட்​களில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​களும் திரண்டு வந்து தரிசனம் செய்​கின்​றனர்.


பக்​தர்​கள் கூட்​டம் அதி​க​மாக இருப்​ப​தால் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்​திருக்​கும் நிலை தொடர்கிறது. இதை பயன்​படுத்தி விரை​வாக தரிசனம் செய்ய வைப்​ப​தற்​காக பக்​தர்​களிடம் அதிக பணம் வசூலிக்​கும் நிகழ்​வு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில், அமைச்​சர், எம்​எல்ஏ, கோயில் தக்​கார் ஆகியோரது உதவி​யாளர்​கள், தங்​களுக்கு வேண்​டிய​வர்​களுக்கு குறுஞ்​செய்தி அனுப்​புவது, அந்த குறுஞ்​செய்​தி​யைக் கோயி​லில் காட்​டி, அவர்​களுக்கு முன்​னுரிமை கொடுத்து தரிசனத்​துக்கு அனு​ம​திக்​கும் விதி​மீறல் தொடர்​பாக, பக்​தர் ஒரு​வர் வீடியோ பதிவு செய்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்​டுள்​ளார். இந்த வீடியோ வேக​மாகப் பரவி வரு​கிறது.


முன்பணம் செலுத்தினால்... அதில், அமைச்​சர், எம்​எல்ஏ, தக்​காரின் உதவி​யாளர்​களிடம் குறிப்​பிட்ட தொகையை முன்​பண​மாக செலுத்​தி​னால், பணம் கட்​டிய​வர்​களின் செல்​போனுக்​கு, அவர்​கள் ஒரு குறுஞ்​செய்​தியை அனுப்பி வைப்​பார்​கள். இந்த குறுஞ்​செய்​தியை கோயி​லில் காட்​டி​னால், எந்​த​வித வரிசை​யிலும் நிற்​காமல் எளி​தாக சென்று சுவாமி தரிசனம் செய்​ய​லாம். இது நீண்​ட​கால​மாக நடந்து வரு​கிறது. இதனால் பொது தரிசன வழி​யில் வரு​வோர், முதி​யோர், ஊனமுற்​றோர், 100 ரூபாய் தரிசனத்​தில் வரும் பக்​தர்​கள் பாதிக்​கப்​படு​வ​தாக வீடியோ​வில் அந்த பக்​தர் தெரி​வித்​துள்​ளார்.


இது தொடர்​பாக கோயில் வட்​டாரத்​தில் விசா​ரித்​த​போது, குறுஞ்​செய்தி முறை தரிசனம் கடந்த சில ஆண்டு கால​மாகவே நடந்து வரு​கிறது என உறு​திப்​படுத்​தினர். இது தொடர்​பாக கோயில் தரப்​பில் கேட்​ட​போது, “முக்​கிய பிர​முகர்​கள், பத்​திரி​கை​யாளர்​கள் சுவாமி தரிசனம் செய்ய வசதி​யாக இந்த குறுஞ்​செய்தி முறை கடைபிடிக்​கப்​படு​கிறது. இதில் பணம் வசூல் செய்​வ​தாக எந்​தப் புகாரும் இல்​லை. இது தொடர்​பாக விசா​ரித்து உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்​றனர்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%