தமிழகத்தில் நாளை முதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு

தமிழகத்தில் நாளை முதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு: வருவாய்த் துறை சங்கம் அறிவிப்பு


தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடா்பான பணிகளை நாளை முதல் புறக்கணிக்கவுள்ளதாக வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, வீடு வீடாக கணக்கீட்டு விண்ணப்பங்களை விநியோகித்து, அவற்றைப் பூர்த்தி செய்து திரும்பப் பெறும் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் கிட்டத்திட்ட 6 கோடி வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில், தமிழ்நாட்டில் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை புறக்கணிக்க வருவாத்துறை சங்கம் முடிவு செய்துள்ளது.


இது தொடர்பாக வருவாய் துறை கூட்டமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


எஸ்ஐஆர் திருத்தப்பணிகள் உரிய திட்டமிடல் என்றும் பயிற்சிகள் அளிக்காமலும் கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி வழங்காமல் அவசர கதியில் மேற்கொள்வதற்கு நிர்பந்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து நிலை வருவாய் ஊழியர்களுக்கும் கடுமையான பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை களைந்திட வலியுறுத்தி நாளை முதல் எஸ்ஐஆர் புறக்கணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அந்த வருவாய்த்துறை சங்கத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள் முதல் வட்டாட்சியர் வரையில் அனைத்து நிலை வருவாய் துறை அலுவலர்களும் முழுமையாக ஈடுபடுவார்கள் என்றும் தமிழ்நாடு வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இன்று மாலை, மாவட்ட கலெக்டர்களிடம் பெருந்திரள் முறையீடு செய்து, மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் சங்கம் திட்டமிட்டுள்ளது. இதனை தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் தலையிட்டு, சுமூகமான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதனால், வாக்காளர்களுக்கு கொடுத்த விண்ணப்பங்களைத் திரும்பப் பெற்று, பதிவேற்றம் செய்யும் பணிகளில் தாமதம் ஏற்படும் சூழல் எழுந்துள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%