டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு
Aug 28 2025
10

ஜெய்ப்பூர்,
பூமியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக டைனோசர் வாழ்ந்து வந்ததாகவும்,காலநிலை மற்றும் இயற்கை பேரழிவுகளால் டைனோசர் இனம் முற்றிலும் அழிந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையொட்டி டைனோசர் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை கண்டறியும் ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் புவியியலாளர்கள் டைசோனசர் காலத்தின் முந்தைய உயிரினத்தின் அரிய முதுகெலும்பு புதை படிவங்களை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அங்கிருந்து எலும்புக் கூடுகள் மற்றும் முட்டை உள்ளிட்ட புதை படிவங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்,
ஜெய்சால்மர் மாவட்டத்தில் பதேகர் பகுதியில் உள்ள மேகா கிராமத்தில் உள்ள ஒரு குளத்தின் அருகே பழமையான உயிரினத்தின் புதை படிவம் கண்டுபிடிக்கப்பட்டது.உடனடியாக அந்த பகுதியை ஆய்வு செய்த போது ஜெய்சால்மர் மாவட்டத்தில் அது டைனோசர் காலத்தின் புதை படிமம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதை படிவம் பைட்டோசார் (மரப்பல்லி) இனம் என தெரிய வருகிறது.முதலை போன்ற ஊர்வனவற்றின் இனத்தை சேர்ந்த இந்த வகை உயிரினம் 210 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம் என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய ராஜஸ்தானின் புவியியலாளரும். விஞ்ஞானியுமான நாராயணன் தாஸ் கூறுகையில்,
மேற்கு ராஜஸ்தானின் பகுதிகளில் டைனோசர் கால முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளது. இவை டைனோசர் எச்சங்களா? உறுதிப்படுத்த ஆய்வு நடந்து வருகிறது என்றார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?