டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு - மக்கள் அவதி

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு - மக்கள் அவதி


மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தகவலின்படி டெல்லியில் காலை காற்றின் தரக்குறியீடு 355ஆக பதிவானது.

புதுடெல்லி,


தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டும் காற்று மாசு தீபாவளிக்கு பிறகு மிக அதிகமாகவே இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த செயற்கை மழையை வர வைக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தோல்வியில் முடிந்தது. அது பற்றிய மறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.


காற்றுத்தர அளவுக் குறியீட்டில் டெல்லியின் பல இடங்கள் மோசமான நிலையை காட்டின. பொதுவாக 100-க்கு மேல் சென்றாலே அது மிதமான நிலையை தாண்டி மோசமான நிலைக்கு கொண்டு செல்கிறது என்று அர்த்தம். ஆனால் டெல்லியில் இன்று காலை நிலவரப்படி காற்றின் தரம் மோசமான அளவில் பதிவாகி உள்ளது. காற்று மாசு அதிகரித்ததன் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர். மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தகவலின்படி டெல்லியில் காலை காற்றின் தரக்குறியீடு 355ஆக பதிவானது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%