டீ

டீ

கண்ணா: இன்னாபா, இப்டி குந்திக்கின? ரெண்டு டீ சொல்லு.


சின்னா: இன்னாது டீ சொல்னுமா? துட்டுக்கிதா?


கண்ணா: இன்னாபா? நமக்குள்ள துட்டு அது இதுன்ற?


சின்னா: கையில கால்காசு துட்டு இல்ல, ஆட்று பன்றாறு. வெறுப்பேத்தாம போயிறு.


கண்ணா: பெரிய இவ்று, ஒரு டீ சொல்ல வக்குள்ள, பேச்சப்பாரு


சின்னா: நானா டீ கேட்டேன், சவ்டால சொல்லிக்கின, பெர்சா


கண்ணா: அதான் சொல்லல இல்ல, எதுக்கு வம்பு வளத்துக்கினு?


சின்னா: இன்னாது நா வம்பு வளத்துக்கினேனா?

வேணாம்னு பாக்கிறேன்


கண்ணா: என்ன அட்சிர்வியா? அட்ர்ரா பாப்போம்.

கைய வச்சிப்பாரு அப்பாலத் தெரியும்


டீக்கடைக்கு வந்திருந்தவர்களை விட அந்த தெருநாய்க்கு ஆர்வம் அதிகமானது. காது மடலை தூக்கி ஆர்வமாக அட்டேன்ஷனில் நின்றது.


சின்னா: என்னா? என்னியால முடியாதுங்காட்டியும்?  


கண்ணா: அதேன் வச்சுப்பாருல்ல, கைய வச்சிருவியா?


சின்னா: இன்னா பூச்சிக் காட்றியா? என்னியப்பத்தித் தெரியுமில்ல?


கண்ணா: தெரியுண்டா கஸ்மாலம், வாடா வாடா கிட்ட வாடா


இப்போது நாய் இன்னும் கொஞ்சம் விரைப்பாக கண்கொட்டாமல் நின்றது.


சின்னா: அப்பாலப் போய்டு, தாங்க மாட்ட சொல்ட்டேன்


கண்ணா: என்னடா பிலிம் காட்ற, வா வந்து கைய வைன்றேன்


சின்னா: ஒனக்கு அம்புட்டுத் திமிரா? ஓடிரு சொல்லிப்புட்டேன்


கண்ணா: ஒரு டீ சொல்ல துப்பில்ல, எங்கையில சீன் காட்டுற


சின்னா: ஆமால, டீ சொல்ல மாட்டேந்தேன். நெதம் ஒனக்கு யாராச்சும் டீ சொல்லோனும். நீயும் குடிச்சிட்டு போவ


கண்ணா: ஆமாடா, நீ சொல்லல்லை, என்னாத்துக்கு மொறைப்பு காட்ற 


சின்னா: சீமத்தொர கணக்கா வருவாரு, டீ சொல்லுவாக இவருக்கு


டீக்கடை உரிமையாளர்: யப்பா ரெண்டு பேரும் சமாதானமா போயிருங்க, கடை வாசல்ல பிரச்சினை வாணாம். 


வேடிக்கைப் பாத்தவங்க எல்லாம் டீ குடிச்சிட்டு வூட்டுக்கு போய்ட்டாக.  


இப்போது கடைக்காரர் மீது நாய்க்கு கோபம் வந்தது. அந்தக் காட்சியின் வீரியத்தை குறைத்து விட்டாரே!


ஏம்பா சின்னா உனக்கு வேணும்னா டீ போடவா? சக்கரை தூக்கலாத்தானே?


சின்னா: இல்லண்ணே கையில துட்டுல்ல. கணக்குல வச்சுக்க


டீக்கடைக்காரர்: ஓங்கைலயும் துட்டுல்லையா, அடச்சீ எடத்த காலி பண்ணுப்பா


கண்ணா, சின்னா: தோள்மேல் கைபோட்டவாறு


ஒலகே மாயம் வாழ்வே மாயம்

ஒரு சிங்கிள் டீக்கு வழியே காணும்.


பாடியபடியே நடந்து சென்ற இருவரையும் பார்த்து நாய்க்கு கடுமையான கோபம் வந்தது. மெல்ல டீக்கடைக்காரர் முன் வாலாட்டி அவர் போட்ட பொறையைக் கவ்விக்கொண்டு ஓடிவிட்டது.


வி.பிரபாவதி

மடிப்பாக்கம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%