டிரைவருடன் கூடிய கண்டக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை,
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் 8 கோட்டங்களில் காலியாக உள்ள 3,274 டிரைவருடன் கூடிய கண்டக்டர் (டி.சி.சி.) பணியிடங்களுக்கு கடந்த மார்ச் 21-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படு, அதற்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் 27-ந் தேதி 15 மாவட்டங்களில் உள்ள 43 மையங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டது.
இந்த தேர்வை எழுத 22 ஆயிரத்து 492 பேர் அனுமதிக்கப்பட்டனர். அதில் 3 ஆயிரத்து 87 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு கடந்த 13-ந் தேதி வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்த எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் https://tancet.annauniv.edu/tancet/irt/index.php என்ற இணையதளத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் டிரைவர் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவை நடத்தப்பட உள்ளன.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?