ஜார்​க்கண்​டில் ‘இந்த வார சிறந்த காவலர்’ திட்டத்தின் கீழ் போலீஸாருக்கு விருது வழங்கி ஊக்​குவிக்​கும் எஸ்​.பி.

ஜார்​க்கண்​டில் ‘இந்த வார சிறந்த காவலர்’ திட்டத்தின் கீழ் போலீஸாருக்கு விருது வழங்கி ஊக்​குவிக்​கும் எஸ்​.பி.

காவலருக்கு பரிசு வழங்கும் சிம்டேகா எஸ்.பி. எம்.அர்ஷி.

புதுடெல்லி: ஜார்​க்கண்​டின் சிம்​டேகா மாவட்ட காவல் துறை​யில் சிறப்​பாக செயல்​படும் ஒரு​வரை ஒவ்​வொரு வார​மும் தேர்வு செய்து அவர்​களுக்கு அம்​மாவட்ட எஸ்​.பி. விருது வழங்கி வரு​கிறார் ஜார்க்​கண்ட் மாநிலத்​தின் சிம்​டேகா மாவட்ட காவல் கண்காணிப்​பாள​ராக (எஸ்​பி) இருப்​பவர் எம்​.அர்​ஷி.


இவர் இந்த வார சிறந்த காவலர் (police man of the week) எனும் புதிய திட்​டத்தை செயல்​படுத்தி வரு​கிறார். இதன்​படி சிம்​டேகா மாவட்ட போலீ​ஸாரில் சிறப்​பாக செயல்​படும் ஒரு​வரை ஒவ்​வொரு வார​மும் தேர்​வுசெய்​கிறார். பிறகு அவருக்கு ‘இந்த வார சிறந்த காவலர்’ விருது வழங்கி கவுரவிக்​கிறார்.


இந்த விருது, பரிசுப் பொருளு​டன் பாராட்​டுச் சான்​றிதழை கொண்​ட​தாகும். ஒவ்​வொரு வாரம் சனிக்​கிழமைதோறும் வழங்​கப்​படும் இவ்​விருதை இது​வரை 9 பேர் பெற்​றுள்​ளனர். மாவட்​டத்​தின் அவுட்​போஸ்ட் முதல் காவல் நிலை​யங்​கள் வரை சாதா​ரணக் காவலர் முதல் ஆய்​வாளர் வரை விருதுக்கு தேர்வு செய்​யப்​படு​கின்​றனர். இதற்​காக எஸ்​.பி. அர்ஷி தலை​மை​யில் சிறப்​புக் குழு செயல்​படு​கிறது. இக்​குழு​வில் துணை எஸ்​பி, டிஎஸ்​பி, காவல் ஆய்​வாளர், உதவி ஆய்​வாளர் மற்​றும் ஒரு காவலர் இடம் பெற்​றுள்​ளனர்.


விருது பெற்​றவரின் புகைப்​படம் ஒரு வாரம் முழு​வதும் மாவட்​டக் காவல் நிலை​யங்​கள் மற்​றும் அவுட்​போஸ்ட்​கள் அனைத்​தி​லும் காட்​சிப்​படுத்​தப்​படு​கின்​றன. இதனால் விருதை பெறு​வதற்​காக போலீ​ஸாரிடையே ஆராக்​கிய​மான போட்டி ஏற்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.


சிறப்​பாக செயல்​படும் போலீ​ஸாரை ஊக்​குவிக்​கும் இந்த தனித்​து​வ​மாக முயற்​சிக்கு மாநிலம் முழு​வதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்​ளது. பிற மாவட்​டங்​களி​லும் இதனை அமல்​படுத்த சோரன்​ தலை​மையி​லான அரசு ஆலோசித்து வருகிறது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%