ஜப்பான் ஆக்கிரமிப்புக்கு எதிரான வெற்றி தின கொண்டாட்டம் : பலத்தை பறைசாற்ற ராணுவ அணிவகுப்பு நடத்தும் சீனா

ஜப்பான் ஆக்கிரமிப்புக்கு எதிரான வெற்றி தின கொண்டாட்டம் : பலத்தை பறைசாற்ற ராணுவ அணிவகுப்பு நடத்தும் சீனா

பெய்ஜிங்,ஆக.23-

ஜப்பானின் ஆக்கிரமிப்பு போருக்கு எதிரான சீனா வெற்றிபெற்ற 80 ஆவது ஆண்டு நிறை வைக் கொண்டாடும் விதமாக செப்டம்பர் 3 அன்று பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பு நடத்த உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இந்த அணிவகுப்பிற்காக கடந்த சில மாதங்க ளாக பயிற்சி நடைபெற்றுள்ளது. ஆகஸ்ட் 17 அன்று இதற்கான இறுதி ஒத்திகை நடைபெற்றுள்ளது எனவும் சீனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 3 அன்று நடைபெறும் இந்த அணிவகுப்பானது 70 நிமிடங்கள் நீடிக்கும் எனவும் இந்த அணிவகுப்பில் இந்த உலகத்திற்கு தங்கள் ராணுவம் கண்டு பிடித்துள்ள பல வகை யான புதிய வகை நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்தும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் (1939-1945) நாஜி-பாசிசத்திற்கு எதிரான வெற்றி மற்றும் அப்போரில் சீனாவை ஆக்கிரமிக்க முயற்சித்த ஜப்பானின் தாக்குதலையும் அந்நாட்டு மக்களின் ஆதரவுடன் முறியடித்தது. இரண்டாம் உலகப்போரின் வெற்றி தினத்தை சீனா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் வெவ்வேறு நாட் களில் கொண்டாடுகின்றன. அதன்படி சீனா செப். 3 அன்று இந்த வெற்றி தினத்தை கொண்டாடுகிறது. 1931 முதல் 1945 வரை சீனா மீது ஜப்பான் நடத்தி வந்த ஆக்கிரமிப்புப் போரின் காரணமாக சுமார் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழந் துள்ளனர். 1937 இல் சீனாவின் நான்ஜிங் பகுதி யில் நடந்த படுகொலை மிகவும் கொடுமையா னது. இந்த தாக்குதலில் மட்டும் சுமார் 3,00,000 க்கும் மேற்பட்ட சீனர்கள் ஜப்பானால் படுகொலை செய்யப்பட்டனர். கடைசியாக சீனாவின் 70 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாட 2019 இல் தியானன்மென் சதுக்கத்தில் ராணுவம் அணிவகுப்பு நடத்தப் பட்டது. அதன் பிறகு தற்போது செப்டம்பர் 3 அன்று தான் ராணுவ அணிவகுப்பு நடக்க உள்ளது. இந்த அணிவகுப்பின் மூலமாக சீனா தனது புதிய தலைமுறை ஆயுதங்களை காட்சிப்படுத்த வாய்ப்பு உள்ளது என பரவலாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக சீன மேஜர் ஜெனரல் வு சேகே பேசுகையில், ஹைப் பர்சோனிக் ஏவுகணைகள், வான் பாதுகாப்பிற் கான ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள், தொழில் நுட்ப ரீதியாக மேம்பட்ட ஆயுதங்கள் இந்த பேரணி யில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%