சென்னை விமான நிலையத்தில் போலி நகை ஏற்றுமதி செய்து ரூ.1,000 கோடி முறைகேடு

சென்னை விமான நிலையத்தில் போலி நகை ஏற்றுமதி செய்து ரூ.1,000 கோடி முறைகேடு

சென்னை:

சென்னை விமான நிலை​யத்​தில் போலி நகைகளை ஏற்​றுமதி செய்து ரூ.1,000 கோடி முறை​கேடு செய்​த​தாக சுங்​கத் துறை அதி​காரி​கள், நகைக்​கடை உரிமை​யாளர்​கள் உள்பட 13 பேர்​ மீது சிபிஐ ஊழல் தடுப்​புப் பிரிவு வழக்​குப் பதிவு செய்​துள்​ளது.


சென்னை மீனம்​பாக்​கம் விமான நிலைய சரக்கு முனை​யத்​தில் மத்​திய அரசின் வரிச்​சலுகை பயன்​படுத்​து​வதற்​காக போலி தங்க நகைகளை ஏற்​றுமதி செய்​திருப்​ப​தாக சுங்​கத் துறை​யின் ஊழல் கண்​காணிப்​புப் பிரிவு சார்​பில் சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள சிபிஐ ஊழல் தடுப்​புப் பிரி​வில் புகார் செய்​யப்​பட்​டது.


சென்​னை​யில் உள்ள நகை தயாரிப்​பாளர்​கள், நகை மொத்த வியா​பாரி​கள் ஆகியோர்​ தங்க நகைகள் செய்​வதற்​காக வெளி​நாடு​களில் இருந்து 24 காரட் தங்​கக் கட்​டிகளை இறக்​குமதி செய்​வது வழக்​கம். இந்த கட்​டிகள் மூலம் 22 காரட் தரத்​தில் தங்க நகைகள் தயார்​ செய்​யப்​பட்ட பின்​னர்​, அவை சவுதி அரேபி​யா, துபாய், கத்​தார்​, சிங்​கப்​பூர்​, ஐரோப்​பிய நாடு​கள் உள்பட பல்​வேறு நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யப்​படும்.


மத்​திய அரசு வழங்​கும் வரி விலக்கை பெறு​வதற்கு சென்​னை​யில் சில நகை வியா​பாரி​கள் வெளி​நாட்​டில் இருந்து 24 காரட் தங்​கக் கட்​டிகளை இறக்​குமதி செய்​து​விட்​டு, 22 காரட் தங்க நகைகளை வெளி​நாடு​களுக்கு அனுப்​புவ​தாக​வும் இவ்​வாறு போலி நகைகளை ஏற்​றுமதி செய்து சுமார்​ 1,000 கோடி ரூபாய் வரை முறை​கேடு செய்​துள்​ள​தாக​வும் புகார் எழுந்​தது.


இதற்கு சுங்​கத் துறையைச் சேர்​ந்த சில அதி​காரி​களும் உதவி செய்​துள்​ள​னர்​. இந்த முறை​கேடு கடந்த 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை​யில் நடை​பெற்​றுள்​ள​தாக கூறப்​படு​கிறது. அரசுக்கு பேரிழப்பு ஏற்​படுத்​திய இந்த முறை​கேட்​டில் தொடர்​புடைய அனை​வரும் மீதும் நடவடிக்கை எடுக்​கப்பட வேண்​டும் என்று அந்த புகாரில் குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.


3 பிரிவு​களின்கீழ் வழக்​கு: இதன்​படி சிபிஐ அதி​காரி​கள் விசா​ரணையை தொடங்​கினர். அதன் அடிப்​படை​யில் சென்னை விமான நிலை​யத்​தில் சுங்​கத் துறை கண்​காணிப்​பாளர்​களாக பணிபுரிந்த அதி​காரி, நகை மதிப்​பீட்​டாளர், தனி​யார் ஏற்​றுமதி நிறுவன நிர்​வாகி, நகைக்​கடை உரிமை​யாளர்​கள் என மொத்​தம் 13 பேர் மீது மோசடி, ஏமாற்​று​தல் உள்​ளிட்ட 3 பிரிவு​களின்கீழ் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.


இந்த வழக்​குத் தொடர்​​பாக சிபிஐ அதி​காரி​கள், சில தினங்​களுக்கு முன்​னர் சென்​னை​யில் 9 இடங்​களில் சோதனை நடத்​தி,

பல முக்​கிய ஆவணங்​களை கைப்​பற்றி இருந்​தனர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. குற்​றச்​சாட்​டுக்கு உள்​ளான 13 பேரிட​மும்

வி​சா​ரணை நடத்த சிபிஐ அதி​காரி​கள் முடிவு செய்​துள்​ளார். அடுத்​தகட்ட வி​சா​ரணை விரை​வில்​ தொடங்​க உள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%