நகர்ப்புற போக்குவரத்துக்கான பாராட்டுச் சான்றிதழை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பெற்றுள்ளது
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் நிரவுண்ம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சிறந்த பல்முனை ஒருங்கிணைப்புடன் கூடிய மெட்ரோ ரெயில் (Metro Rail with the Best Multimodal Integration) என்ற பிரிவின் கீழ், நகர்ப்புற போக்குவரத்தில் சிறந்த செயல்திறன் விருது (Award of Excellence in Urban Transport) , சிறந்த பயணிகள் சேவை மற்றும் திருப்தி அளிக்கும் மெட்ரோ பிரிவில், நகர்ப்புற போக்குவரத்துக்கான பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ளது.
இந்த விருதுகள், ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் நடைபெற்ற நகர்ப்புற போக்குவரத்து இந்தியா (UMI) மாநாடு 2025-ன் நிறைவு விழாவில் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளை மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி . மனோகர் லால் கட்டார் அவர்களும், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை மந்திரி தோக்கன் சாகு அவர்களும் வழங்கினர்.
இந்த விருதுகளை, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் (சிறப்பு முயற்சிகள் துறை) கே. கோபால், தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளரும், சென்னை மெட்ரோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம். ஏ. சித்திக், ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்த பாராட்டு, சென்னை மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த நகர்ப்புற போக்குவரத்தை வழங்குவதில் சென்னை மெட்ரோ நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது .
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?