சென்னை கே.கே. நகரில் பேச மறுத்த காதலனை கம்பால் விரட்டி, விரட்டி தாக்கிய காதலி

சென்னை கே.கே. நகரில் பேச மறுத்த காதலனை கம்பால் விரட்டி, விரட்டி தாக்கிய காதலி

சென்னை,


சென்னை, கே.கே.நகர் அடுத்த நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அசோக்நகர் பகுதியை சேர்ந்த கார்பெண்டராக வேலை பார்த்து வரும் வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.


கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காதலர்கள் இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த வாலிபர் காதலியுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இளம்பெண் செல்போனில் பேச முயற்சி செய்தும் அவர் பேச மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.


இதனால் இளம்பெண் காதலன் மீது கடும்கோபத்தில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் கே.கே.நகர் ஏ.பி.பட்ரோடு சாலையில் அந்த வாலிபர் தனது தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அங்கு அவரது காதலி தனது தங்கையுடன் அங்கு வந்தார். அவர்கள் இருவரும் அந்த வாலிபரை வழி மறித்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.திடீரென இளம்பெண் தனது காதலனை சிறிய கம்பால் அடித்து துவைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர் அங்கி இருந்து ஓட முயன்றார். ஆனாலும் இளம்பெண் தனது தங்கையுடன் சேர்ந்து விரட்டி, விரட்டி காதலனை தாக்கினார்.


இதனைக்கண்டு வாலிபருடன் வந்த அவரது தாய் மற்றும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மோதலில் ஈடுபட்ட இளம்பெண் மற்றும் வாலிபரை சமாதானம் செய்து பொதுமக்கள் அங்கு இருந்து அனுப்பி வைத்தனர். இளம்பெண் தாக்குதலில் வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.


இதற்கிடையே பேச மறுத்த காதலனை நடுரோட்டில் காதலி தாக்கும் ந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இது தொடர்பாக கே.கே.நகர் போலீசார் காதலர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%