சென்னையில் இருந்து துர்காபூர் புறப்பட இருந்த விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயற்சி நடந்ததால் பரபரப்பு

சென்னையில் இருந்து துர்காபூர் புறப்பட இருந்த விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயற்சி நடந்ததால் பரபரப்பு

சென்னை:

சென்​னையி​லிருந்து துர்​காபூர் புறப்பட இருந்த விமானத்​தின் அவசர கால கதவைத் திறக்க முயற்சி நடந்​த​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. சென்​னையி​லிருந்து மேற்கு வங்க மாநிலம் துர்​காப்​பூர் செல்​லும் இண்​டிகோ ஏர்​லைன்ஸ் விமானம் புறப்​படத் தயா​ரானது. விமானத்​தில் 158 பயணி​கள், 6 விமான ஊழியர்​கள் இருந்​தனர்.


விமானத்​தின் கதவு​கள் மூடப்​பட்​டு, விமானம் ஓடு​பாதை​யில் ஓட இருந்​த​போது, விமானத்​தின் அவசர கால கதவு திறக்கப்படுவதற்கான எச்​சரிக்கை மணி, விமான கேப்​டன் கேபினில் ஒலித்​தது. இதையடுத்து விமான பணிப்​பெண்​கள் விரைந்து சென்று அவசர கால கதவைத் திறக்க முயன்​றது யார் என்​பதை பார்த்​தனர். அப்​போது அவசர கால கதவு அருகே‌ உள்ள இருக்கையில் அமர்ந்​திருந்த தெலங்​கானா மாநிலம் ஐதரா​பாத்தை சேர்ந்த சர்க்​கார் (27) என்ற பயணி​தான் கதவைத் திறக்க முயன்றார் என்​பது தெரிய​வந்​தது.


விமான பாது​காப்பு அதி​காரி​கள் விமானத்​துக்​குள் ஏறி, அந்த பயணி​யிடம் விசா​ரணை நடத்​தி​ய​போது, சென்னை ஐஐடி​யில் ஆராய்ச்சி படிப்பு படிப்​ப​தாக​வும், சொந்த வேலை​யாக துர்​காபூர் செல்​வ​தாக​வும், தெரி​யாமல் அவசர கால கதவைத் திறப்பதற்கான பட்​டனை அழுத்​தி​விட்​ட​தாக​வும் தெரி​வித்​தார்.


அந்த விளக்​கத்தை ஏற்​காத அதி​காரி​கள், அவரது பயணத்தை ரத்​துசெய்​து, சென்னை விமான நிலைய போலீ​ஸாரிடம் ஒப்​படைத்தனர். போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இதனால், வி​மானம் ஒரு மணி நேரம் தாமத​மாக சென்​னையி​லிருந்​து துர்​காபூர்​ புறப்​பட்​டது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%