சுற்றுலாத்துறையில் சிறந்த 31 தொழில் நிறுவனங்கள், அரசுத்துறைகள், சுற்றுலா செயல்பாட்டாளர்களுக்கு விருதுகள்:

சுற்றுலாத்துறையில் சிறந்த 31 தொழில் நிறுவனங்கள், அரசுத்துறைகள், சுற்றுலா செயல்பாட்டாளர்களுக்கு விருதுகள்:

சுற்றுலாத்துறையில் சிறந்த 31 தொழில் நிறுவனங்கள், அரசுத்துறைகள், சுற்றுலா செயல்பாட்டாளர்களுக்கு விருதுகள்: மா.சுப்பிரமணியன்,சேகர்பாபு வழங்கினர்


சென்னை, அக். 24–


2025–ம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கும் விழா மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில் சென்னை ஹோட்டல் லீலா பேலஸில், நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் 31 தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், டிராவல் நிறுவனங்கள், அரசுத்துறைகள் உள்ளிட்ட சுற்றுலா செயல்பாட்டாளர்களுக்கு அமைச்சர்கள் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்கி சிறப்பித்தார்கள். கடந்த 2022–ம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.


இந்த ஆண்டு சுற்றுலாத்துறை மூலம் கீழ்கண்ட 13 வகையான விருதுகள்


தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர் சிறந்த பயண பங்குதாரர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத்தலம், பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர் பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர் மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா நிறுவனம், சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர், சுற்றுலா வழிகாட்டி மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம்... என தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், டிராவல் நிறுவனங்கள், அரசுத்துறைகள் உள்ளிட்ட சுற்றுலா செயல்பாட்டாளர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை அமைச்சர்கள் வழங்கினர்.


இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா,சுற்றுலா துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், சுற்றுலாத்துறை இயக்குநர் தா.கிறிஸ்துராஜ், சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் ச.கவிதா, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%