சீர்காழி அருகே திருச்சிற்றம்பலம் ஸ்ரீ சீதளா மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்
Nov 04 2025
13
சீர்காழி , நவ , 05 -
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா அரசூர் வட்டம் திருச்சிற்றம்பலம் கிராமம் ஸ்ரீ சித்தி விநாயகர் , ஸ்ரீ சீதளா என்னும் மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகப் பெரு விழா நடைப்பெற்றது.
திருச்சிற்றம்பலத்தில் அன்னை பராசக்தியின் அம்சமாய் விளங்கும் அருள்மிகு ஸ்ரீ சீதளா எனும் மகாமாரியம்மன் கோயில் கொண்டு எழுந்தருளி அன்பர்களுக்கு வேண்டும் வரங்களை விரைந்து வழங்கி வரும் மாரியம்மனின் இவ்வழகிய திருக்கோயிலில், 37 ஆண்டுகளுக்குப் பிறகு, திருப்பணிகள் செய்விக்கப்பெற்று.
சுதைகள் செப்பனிடப் பெற்று, வண்ணம் தீட்டப்பெற்றுப் புதுப்பொலிவோடு திரயோதசி திதி உத்திரட்டாதி நக்ஷத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் தனுர் லக்னத்தில் தருமை ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களின் அருளாசியுடன் மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் ஸ்ரீ வைத்தியநாத சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ மத் திருநாவுக்கரசு தம்பிரான் ஸ்வாமிகள் அவர்களின் ஆசியுடன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது .விழா ஏற்பாடுகளை அறங்காவலர் வி.ராமலிங்கம் பிள்ளை மற்றும் குல தெய்வகாரர்கள்,ஊர் கிராமவாசிகள் செய்தார்கள்.
4ம் தேதி செவ்வாய்கிழமை முதல் 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?