சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு, பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை
Aug 16 2025
12

தூத்துக்குடி:
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் மற்றும் பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 2024-ம் ஆண்டு 17 வயது சிறுமியை கோவில்பட்டி மேட்டுத்தெருவைச் சேர்ந்த கனகராஜ் மனைவி கவிதா (25) என்பவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். மேலும், அந்த சிறுமியை தூத்துக்குடி பூபாண்டியபுரத்தைச் சேர்ந்த பெயின்டர் தங்கதுரை (41) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி எம்.பீரித்தா, குற்றம் சாட்டப்பட்ட தங்கதுரைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், கவிதாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் காவல் துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் முத்துலட்சுமி ஆஜரானார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?