சிறுமிக்கு பாலியல் கொடுமை: குற்றவாளி பற்றி தகவல் தந்தால் ரூ.5 லட்சம் பரிசு
Jul 23 2025
74

சென்னை
தமிழக டி.ஜி.பி., அலு வலகம் நேற்று வெளியிட்டு உள்ள அறிக்கை:
கடந்த, 12ம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 10 வயது சிறுமி மர்ம நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். போலீசாரின் விசாரணையின்போது, படங்கள் மற்றும் வீடியோக்கள் வாயிலாக, மர்ம நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆனால், அவர் பெயர், வீட்டு முகவரி தெரியவில்லை. இது தொடர்பாக, காவல் துறை சார்பில் எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இவ்வழக்கு விசாரணைக்கு உதவியாக, மர்ம நபரை அடையாளம் காணவும், துப்பு துலக்கவும் பயனுள்ள குறிப்பிடத்தக்க மற்றும் நம்பகமான தகவல்கள் தருவோருக்கு, 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும். மேலும், தகவல் அளிப்போரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும்.
மர்ம நபர் குறித்து ஏதேனும் தகவல் மற்றும் விபரம் தெரிந்தவர்கள், இதற்கென ஒதுக்கப்பட்டு உள்ள, 99520 60948 என்ற மொபைல் போன் எண்ணுக்கு நேரடி அழைப்பு வாயிலாகவோ அல்லது குறுஞ்செய்தி, 'வாட்ஸாப்' வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?