செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் அருகே
ஆயிரம் அடி கொண்ட மலை
மீது பிரம்மாண்ட நரசிங்க பெருமாளுக்கு புதிதாக தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.
சித்தரவாடி கிராமத்தில்
நரசிங்க பெருமாள் கோவில்
ஆயிரம் அடி கொண்ட
மலைமீது உள்ளது
ஸ்ரீ வேணுகோபாலப் பெருமாள்
ஸ்ரீ பத்மாவதி அறக்கட்டளையின் மூலம் இக்கோயில் இயங்கி வருகிறது. இத்திருக்கோவில்
தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.
இந்த கோவிலின் விசேஷமான பூஜை என்றால் சுவாதி நட்சத்திரத்தில் வரக்கூடிய நாளன்று சிறப்பு பூஜை நடைபெறுகின்றது. சுவாதி நட்சத்திரத்தில் பூஜிக்கும் போது பக்தர்கள் கலந்து கொண்டால் பல வருடங்களாக குழந்தை இல்லாதவர்க்கு குழந்தை பாக்கியம், திருமணம் தடை, கல்யாணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும், கடன் தொல்லை மற்றும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும், என்பது ஐதீகமாக உள்ளது. இத்திருக்கோவிலில்
நரசிங்க பெருமாள் கோவில்
சிங்க முகம் வடிவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு அதில் உள்ள நரசிங்க பெருமாள் மூலவருக்கு புதிதாக தங்க கவசம் அணிவித்தனர்.
தங்க கவசத்தை காண
ஆண்கள் பெண்கள் என ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷத்துடன் சுவாமியை வழிபட்டனர்.
பின்பு கோவில் நிர்வாகததின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
மேலும் வரும் ஜனவரி 1அன்று விசேஷ பூஜை நடைபெறும் மேலும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் செய்தி குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?