சத்தீஸ்கரில் 10 நக்சல்கள் சுட்டுக்கொலை! 26 பேர் கைது!

சத்தீஸ்கரில் 10 நக்சல்கள் சுட்டுக்கொலை! 26 பேர் கைது!

சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சல்களின் மூத்த தலைவர் உள்பட 10 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சத்தீஸ்கரின் கரியாபந்து மாவட்டத்தில், சிறப்பு அதிரடிப் படை மற்றும் சி.ஆர்.பி.எஃப். கோப்ரா படையினர் இணைந்து நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இன்று (செப்.11) ஈடுபட்டனர்.


மெயின்பூர் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளின்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.


இந்தத் தாக்குதலில், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் உள்பட 10 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், ரூ.1 கோடி வெகுமதி அறிவித்து தேடப்பட்ட தெலங்கானாவைச் சேர்ந்த நக்சல் தலைவர் மொடெம் பாலகிருஷ்ணா (எ) பாலண்ணா கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இத்துடன், கூட்டாக ரூ.13 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 6 நக்சல்கள் உள்பட 26 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


முன்னதாக, வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் நக்சல்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%