
சென்னை கூத்துப்பட்டறை மற்றும் பைந்தமிழ் வலையொளி இணைந்து ஆசிரியர் தினவிழாவை மதுரை செய்தியாளர் அரங்கத்தில் நடத்தினர்.
விழாவிற்குப் பேராசிரியர் வீ.மோகன் தலைமை வகிக்க, பேராசிரியர் காந்திதுரை முன்னிலை வகித்தார். நல்லாசிரியர் மு.மகேந்திர பாபு வரவேற்றார்.
சிறப்பாகப் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு 'ஆற்றல் ஆசிரியர்' விருது வழங்கும் விழாவில் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சண்முககுமாரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் அவர்களுக்கு "பைந்தமிழ்ப் புரவலர் விருது" பெரும்புலவர் சன்னாசி அவர்கள் வழங்கினார். கவிஞர் மூரா உட்பட பலரும் கலந்து கொண்டனர். சென்னை கூத்துப்பட்டறை நிறுவுநர் முத்துசாமி நன்றி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?