சட்டவிரோதப் பாலினப் பரிசோதனை 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறை
Nov 27 2025
43
கருவில் இருக்கும் சிசுவின் பாலி னத்தை சட்டவிரோதமாகக் கண்டறியும் இயந்திரத்தை வைத்திருந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சி. பி. ஆதித்யா உத்தரவிட்டுள்ளார். கடந்த 23.10.2025 அன்று, பொயணப்பாடி கிராமத்தில் செந்தில்குமார் என்பவரது வீட்டில் வேப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அகிலன் தலைமையிலான மருத்துவக் குழு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட பாலினக் கண்டறிதல் இயந்திரம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாகச் சிறுபாக்கம் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிறை யில் அடைத்தனர். தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடு வதைத் தடுக்கும் பொருட்டு, அவர்களின் தொடர் குற்றச்செயலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பிச்சைமணி மகன் செந்தில்குமார் (36), வீரமணி மகன் ராஜா (36), ரமேஷ் மனைவி மாலதி (34) ஆகிய மூன்று பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரைத்தார். இதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் சி. பி. ஆதித்யா இவர்களைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தற்போது மூவரும் கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?